இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டு!

Human Rights Council Sri Lanka United States of America
By Sivaa Mayuri Mar 21, 2023 08:32 PM GMT
Report

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டு! இலங்கையில் 2022ஆம் ஆண்டளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் நேற்று வெளியிடப்பட்ட மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த நாடுகளுக்கான அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை, நீடித்த மின்வெட்டு, உயர்ந்துவரும் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் நாடு உள்நாட்டு அமைதியின்மைக்கு தள்ளப்பட்டது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டு! | Significant Human Rights Abuses In Sri Lanka

ஆபத்தான சிறை நிலைமைகள்

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்காகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சட்டத்திற்குப் புறம்பான மற்றும் தன்னிச்சையான கொலைகள், சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனை, கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள், தன்னிச்சையான கைது மற்றும் தடுப்பு, தனிநபர்களுக்கு எதிரான அடக்குமுறை.

மேலும், நீதித்துறையின் சுதந்திரத்தில் கடுமையான சிக்கல்கள், தனியுரிமையில் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத தலையீடு, ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள், ஊடகவியலாளர்களை நியாயமற்ற முறையில் கைது செய்தல் மற்றும் தணிக்கை உள்ளிட்ட கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், இணையச் சுதந்திரத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகள்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டு! | Significant Human Rights Abuses In Sri Lanka

பாலியல் வன்முறை

அத்துடன், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் அமைப்புகளின் நிதி அல்லது செயல்பாடு ஆகியவற்றின் மீதான அதிகப்படியான கட்டுப்பாடுகள்,அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் அதன் சுதந்திரத்தில் கணிசமான குறுக்கீடு, அரசாங்கத்தின் கடுமையான ஊழல், உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்குக் கடுமையான அரசாங்க கட்டுப்பாடுகள் அல்லது துன்புறுத்தல், பொறுப்புக்கூறல் இல்லாமை, பாலியல் வன்முறை, வயது வந்தவர்களிடையே ஒருமித்த ஒரே பாலின பாலியல் நடத்தையைக் குற்றமாக்கும் சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் உட்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ராஜாங்க திணைக்களம் இலங்கை மீது சுமத்தியுள்ளது.

இந்தநிலையில், மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் காணவும், விசாரணை செய்யவும், வழக்குத் தொடரவும் மற்றும் தண்டிக்கவும் அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டு! | Significant Human Rights Abuses In Sri Lanka

வன்முறை - சேதம்

அத்துடன் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. மே மாதம் 9ஆம் திகதியன்று கொழும்பில் அமைதியான போராட்ட முகாம் மீது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையும் அந்த அறிக்கை நினைவு கூர்ந்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு மாலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் அரசாங்க ஆதரவாளர்களைத் தாக்கினர்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர் அல்லது கடுமையாகச் சேதப்படுத்தினர்.

இதனையடுத்து செப்டம்பர் மாதம் வரை, மே 9 வன்முறை தொடர்பாக 3,300க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாகவும் 2,000க்கும் அதிகமானோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

அந்த அறிக்கையின்படி, கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியான போராட்டக்காரர்கள் என்றும், போராட்ட முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US