தமிழர்களுக்கான நீதியை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம்
வடக்கு - கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரும் கையெழுத்து போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கையெழுத்து போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று(29) காலை நடாத்தப்பட்டுள்ளது.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும், நேற்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தீபன்
வவுனியா
செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வவுனியா இலுப்பையடி பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளில் குறித்த போராட்டமானது நேற்று(29.08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நீதி கோரி கையொப்பம் இட்டனர்.
செய்தி - திலீபன்
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உப தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் நேற்று(29) காலை 8.30 மணி முதல் 10 மணி வரை வவுனியா - நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன், உறுப்பினர்களான கே.தர்சினி, வீ.ஶ்ரீதரன், குகன் ஆகியோருடன் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எழுத்து மூலமான கோரிக்கையை வலுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri

சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
