2009 யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் இட்ட கையொப்பம் (Video)
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழினத்திற்கு சொந்தமானது. அதை யாரும் உரிமை கோர முடியாது என இராணுவ ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“பல்வேறு தரப்புகளை கடந்து விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயருடன் வெளிவந்தது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி போர் நெருங்கி வந்த காலத்தில் உயிர் சேதங்களை கருத்தில் கொண்டு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போராளிகள் சுயவிருப்பின் படி, சுய முடிவுகளை எடுக்கலாம் என தனது கையெழுத்து இட்டு எழுதிக்கொடுத்துள்ளார்.
அந்த கணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை யாரும் உரிமைகோர முடியாது.
இதன்படி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழினத்திற்கு சொந்தமானது. அதாவது குறித்த இயக்கம் பொதுவுடைமையாக்கப்பட்டது.
இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் இல்லாத போது, இதை மற்றவர்களும் மூன்றாம் உலக நாடுகளும் உரிமைக்கொள்வது எந்த விதத்தில் நியாயமானது என தெரியவில்லை.”என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |