உல்லாசப் பயணிகளின்றி வெறிச்சோடிப்போயுள்ள சிகிரியா சுற்றுலாத்தலம்
சிகிரியா பிரதேசத்தை அண்மித்த சுற்றுலாத்தலங்கள் உல்லாசப் பயணிகள் இன்றி வெறிச்சோடிப் போயுள்ளது.
நாட்டினுள் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் உணவுப்பொருள் நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சமீபத்திய நாட்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாகச் சுற்றலாப் பயணிகளை நம்பியிருந்த பல உணவகங்கள் வெறிச்சோடி காணப்படுவதுடன், அதன் உரிமையாளர்கள் வருமானமின்றி தவித்துப் போயுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியின் விளைவு
அதே போன்று சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக வாடகை வாகனப் போக்குவரத்துகளை மேற்கொண்ட வாகன உரிமையாளர்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்மை காரணமாகப் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் சிகிரியா சுற்றுலாப் பிரதேசம் முற்றாக வெறிச்சோடி களையிழந்து போயுள்ளதுடன், சுற்றுலாப் பிரதேசத்தை நம்பியிருந்த பொதுமக்களும் பொருளாதார இழப்பின் காரணமாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தென்னிலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam