பேருந்தில் சென்ற மக்களிற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய யானையின் உதவி
பொதுமக்களுக்கு யானையின் உதவி
சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்று சுற்றுலா குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சிகிரியாவுக்கு அண்மையில் நிறுத்தப்பட்ட போது புதைந்து நின்றது.
இதன்போது பேருந்தை இயக்க முயற்சித்த போதும் அது தோல்வியடைந்துள்ளது.
பின்னர், சிகிரியா சபாரியில் பயன்படுத்தப்பட்ட யானையின் உதவி இதற்கு பயன்படுத்தப்பட்டது. இதன்போது பேருந்தின் முன் கயிறு கட்டி யானையின் தும்பிக்கையில் கொடுத்து இழுத்து இயங்க வைக்கப்பட்டது.
இலங்கையில் யானைகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் இச் சம்பவம் பேருந்தில் சென்ற மக்களிற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் முதன்மை சுற்றுலா இடம்
இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர்.
இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது.
இவ் இடத்தை பார்வை இடுவதற்காக அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.