வெடித்தது போராட்டம்! - முக்கிய அமைச்சர் ஒருவரின் வீடும் முற்றுகை?
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடும் சற்று முன்னர் சுற்றி வளைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது இராணுவ வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போராட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உடன் அமுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடும் சற்று முன்னர் சுற்றி வளைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.