உழைப்பால் உயர்ந்த சித்தாலேப குழுமத் தலைவர் விக்டர் ஹெட்டிகொட இனி இல்லை!
சித்தாலேப குழுமத்தி;ன் தலைவர் கலாநிதி விக்டர் ஹெட்டிகொட தமது 84வது வயதில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்
ஆயுர்வேதத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக தேசபந்து- நிலை 1 என்ற கௌரவத்தை 1990ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் இருந்து ஹெட்டிகொட பெற்றுக்கொண்டார்.
இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் தரப்படுத்தப்பட்டுள்;ள 50 முன்னிலை தொழில் தருனர்களின் பட்டியலில் ஹெட்டிகொடவும் உள்ளடங்குகிறார்.
“சித்தாலேப” என்ற வியாபாரக் குறியீட்டுடன் ஆயர்வேத உற்பத்தியை ஆரம்பத்தில் நடைப்பயணமாக வீடுவீடாக சென்று விற்பனை செய்து இறுதியில் முன்னிலை தொழில் தருனராக உயர்ந்தவர் விக்டர் ஹெட்டிகொட என்பதை பலரும் நினைவுகூருவர்.
இலங்கையை பொறுத்தவரை அவசர வலி நிவாரணியாக சித்தாலேப உச்சரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



