கோட்டாபய ராஜபக்சவுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் குழுவினர்
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் குழுவினர்

சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தினை அடுத்து கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் அவர் பதவி விலகாது ராணுவ ஜெட் விமானத்தில் மாலைத்தீவு சென்றடைந்தார்.
இந்த நிலையில் சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் ஊடகவியலாளர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
50 லட்ச ரூபாய் வேலையை விட்டுவிட்டு மோமோஸ் பிசினஸ் துவக்கிய நபர்: அவரது இன்றைய வருமானம் News Lankasri
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri