தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணயின் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட மார்பெலும்பு காயம் காரணமாக உள்இரத்தக் கசிவு ஏற்பட்டதால் இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரியை ஆட்டமிழக்கச் சயெ்ய அபாரமான பிடியெடுப்பு ஒன்றை எடுத்த போது, மார்புப் பகுதியில் கடுமையாக காயமடைந்தார்.
இரத்தக்கசிவு காரணமாக
பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சபை் பிரிவில் உள்ளார்.

உள்இரத்தக் கசிவு ஆரம்பமானதால் அவரை உடனடியாக அனுமதிக்க வேண்டியிருந்தது. இரத்தக்கசிவு காரணமாக தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
31 வயதான ஷ்ரேயாஸ் அய்யர், மேலும் ஒரு வாரம் சிட்னி மருத்துவமனையில் தங்கியிருந்து, பின்னர் இந்தியாவிற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri