வீடுகளிலிருந்து வேலை செய்ய தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டும்:பத்மா குணரட்ன
வீடுகளிலிருந்து வேலை செய்வதற்கு தொடர்ந்தும் அனுமதியளிக்கப்பட வேண்டுமென இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் பத்மா குணரட்ன (Padma Gunaratne) கோரியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வீடுகளிலிருந்து வேலை செய்யும் எண்ணக்கரு தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் நோய் தொற்றாளர் எண்ணிக்கையும் நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் சற்றே அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் நாட்டை முடக்குவது குறித்து எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து தங்களது நடத்தையினால் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
நோய்த்தொற்று இல்லை என எந்த வகையிலும் கூற முடியாது என டொக்டர் பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார்.
