டென்மார்க்கில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியுள்ளதாக டென்மார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிட்டி சென்டர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள அமேஜர் மாவட்டத்தில் உள்ள பெரிய வணிக வளாகத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் சம்பவ இடத்தில் இருக்கிறோம், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மற்றும் பலர் தாக்கப்பட்டனர்," என்று கோபன்ஹேகன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரின் தெற்கில் உள்ள வணிக வளாகத்திற்கு ஆயுதமேந்திய அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அங்குள்ள அனைத்து சாலைகளும், நகர மையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதையும் மூடப்பட்டுள்ளன.
மேலும் அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
