பின்லாந்தினை உலுக்கிய துப்பாக்கிச் சூடு!..பாடசாலை மாணவன் பலி
பின்லாந்தின் (Finland) தலைநகரான ஹெல்சின்கி (Helsinki) நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த தூப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு மாணவன் பலியாகியுள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, குறித்த பாடசாலையில் இருந்து சிறிது தூரத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், முதற்கட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு அவர்கள் இருவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சந்தேகநபர் ஒருவரின் உறவினருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தாக்குதல் நடைபெற்ற பாடசாலையில் 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்ததாக பின்லாந்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
@tamilwinnews பின்லாந்து பாடசாலையில் துப்பாக்கிசூடு! #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Finland #School ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |