மின் தடை தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
நாட்டில் நாளைய தினம் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இது குறித்து அறிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்நிலையம் மற்றும் கொழும்பு துறை மின்சார நிலையங்களுக்கு சுமார் 2500 மெற்றிக்தொன் உலை எண்ணெய்யை விநியோகிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கிமையை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மின்சாரசபை பெருந்தொகையான நிலுவைக் கொடுப்பனவையும் செலுத்தவேண்டியுள்ள நிலையிலேயே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலை எண்ணெய்யை விநியோகிக்க இணங்கியுள்ளது.
எனினும் இந்த உலை எண்ணெய் விநியோகம் இடம்பெறாதவிடத்து, நாட்டில் இரண்டரை மணித்தியால மின்சார விநியோகத் தடை மேற்கொள்ளப்படலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் P.W. ஹெந்தஹேவா இந்த பரிந்துரையை மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவுக்கு அனுப்பியுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
