நாட்டில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் அண்மைக்காலமாக மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினமும் சில பகுதிகளுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரு கட்டங்களாக இந்த துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலயம் E மற்றும் F ஆகிய பகுதிகளுக்குக் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சிமுறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
வலயம் P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்குக் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாணந்துறை, ஹொரனை, களுத்துறை, மத்துகம, அம்பலாங்கொடை உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு திடீர் மின்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri