சிற்றுண்டி விலைகளில் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சிற்றுண்டிகளின் விலைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று (05.02.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வாறான சூழலில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் இடையே நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
சிற்றுண்டிகளின் விலைகள்
குறித்த கலந்துரையாடலில் சமையல் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் சிற்றுண்டிகளினது விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை லாஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
