இலங்கையில் கோதுமை மாவிற்று தட்டுப்பாடு ஏற்படும் நிலை
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட கூடும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பேக்கரி உரிமையாளர்களுக்கு தேவையான கோதுமை மாவினை பிறிமா நிறுவனமே வழங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக பேக்கரி தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு கடும் சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
செரன்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமிற்கான விலையை 18 ரூபாயினால் அதிகரித்தமையினால் பாண் ஒன்றின் விலை இந்த வாரம் 10 ரூபாயில் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என அமைச்சர் லசந்த அழகியவன்ன வாக்குறுதியளித்தமையினால் பாண் விலை அதிகரிப்பினை கைவிட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் மாவின் விலையை குறைக்க முடியாதென செரன்டிப் நிறுவனம் பேக்கரி உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் கோதுமை மாவின் விலையை குறைக்கவில்லை என்றால் பாண் உட்பட பேக்கரி தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க நேரிடும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
