வவுனியாவில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ மருந்துகளுக்கு தட்டுப்பாடு
கோவிட் தொற்று காரணமாக வவுனியா மாவட்டத்தில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்க கூடிய விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துமாறு சில மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் பலரும் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளை அதிகளவில் கொள்வனவு செய்து வீடுகளுக்கு கொண்டு செல்வதனால் பல தனியார் மருந்தங்களில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் மருந்தகங்களுக்குச் செல்லும் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், பரசிட்டமோல் மருந்துக்கான கேள்வியும் அதிகரித்துள்ளமையால் சில மருந்தகங்களில் அதன் இருப்பு முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam