திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கான ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (10.01.2024) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண சபைக்கு சொந்தமான குறித்த வைத்தியசாலை 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மத்திய அரசாங்கத்திற்கு கீழ் உள்வாங்கப்பட்டதாகவும், அன்று தொடக்கம் இன்று வரை புதிய சிற்றூழியர்களை நியமிக்கப்படவில்லை எனவும் புதிய ஊழியர்களை நியமிக்குமாறும் கோரி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆளணி பற்றாக்குறை
மேலும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றியவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சிலர் ஓய்வூதியம் பெற்று சென்றுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 333 சிற்றூழியர்கள் தேவைப்படுகின்ற பட்சத்தில் 206 பேர் கடமையில் தற்பொழுது இருப்பதாகவும் இதனால் விடுமுறை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இதன்படி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam