அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை:அமைச்சர் வெளியிட்ட தகவல்
பண்டிகை காலத்தில் நாட்டினுள் அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரிசி இறக்குமதி
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நெல்லுக்கான தட்டுப்பாடு இல்லை. எனவே, எவ்வாறு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும்.

விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் நெல்லுக்கான நிர்ணய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அரசாங்கம் என்ற வகையில் அரிசியை இறக்குமதி செய்யவும் தயாராக இருப்பதாக வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri