சில இடங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு
நாட்டின் சில பிரதேசங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது. வாகனங்களின் உரிமையாளர்கள் எரிபொருள் தாங்கிகளை நிரப்பிக்கொண்டுள்ளதால், பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து போயுள்ளது.
சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என அவற்றின் முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் எரிபொருளை விற்பனை செய்யாது இருப்பதாக நுகர்வோர் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் கையிருப்பில் எரிபொருள் தேவையான அளவு இருப்பதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
