இலங்கையில் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை! சுகாதார அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் தற்போது நூற்று பத்தொன்பது வகையான
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க நேற்று (24.04.2023) நடைப்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மருந்து வகைகள்
மேலும் தெரிவிக்கையில், குறித்த பதினான்கு வகை உயிர்காக்கும் மருந்துகளில் இரண்டு வகையான மருந்துகள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் இந்திய கடன் திட்டத்தில் இருந்தே பெறப்பட உள்ளன எனவும் எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மருந்துப் பற்றாக்குறையை சுமார் 60 மருந்துகளுக்கு மட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய கடன் திட்டம்
இதற்கமைய இந்தோனேசிய கடன் திட்டம் மூலம் இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
