இலங்கையில் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் நிரம்பி வழியும் கோவிட் நோயாளிகள்
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து தீவிர சிகிச்சை பிரிவுகளும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சுகாதாரப்பிரிவினர் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 186 தீவிர சிகிச்சை பிரிவு கட்டில்கள் கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 85 தீவிர சிகிச்சை பிரிவு கட்டில்களின் ஒரு பகுதி கோவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள அவசர நிலையில் குறித்த 85 கட்டில்களிலும் ஒரு தொகையை கோவிட் நோயாளர்களுக்கு ஒதுக்க நேரிட்டுள்ளதாகவும்,
இதனால் வேறு நோய்களால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam