பிலிப்பைன்ஸில் பட்டமளிப்பு விழாவில் நேர்ந்த விபரீதம்: மூவர் பலி
பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலாவின் பல்கலைகமொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நகரின் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.
மனிலாவின் சுபுருபான் கியூஸோன் நகரில் அமைந்துள்ள அடினியோ டி மனிலா பல்கலைக்கழத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டத்துறை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் இனந்தெரியாத நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்சிச் சூட்டு சம்பவம் காரணமாக பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் வாகனமொன்றில் தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்
என்ன காரணத்திற்காக இவ்வாறு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒர் மருத்துவர் எனவும், நகரின் முன்னாள் மேயர் ரொசிடா புரிகேயுடன் நீண்ட கால பகை நிலவி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் முயர் புரிகேயும், அவரது சகா ஒருவரும், பல்கலைக்கழக பாதுகாவலர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் தலைமைப் பேச்சாளராக நாட்டின் பிரதம நீதியரசர் அலெக்சான்டர் கெசிமுட்டோ பங்குபற்றவிருந்தார் எனவும் சம்பவத்தை தொடர்ந்து அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.