ஜேர்மனியில் இஸ்ரேல் தூதரகம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம்
ஜேர்மனியின் முனிச் நகரில் உள்ள அருங்காட்சியகம் அருகே செயல்படும் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த இடத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்த முயன்றுள்ளனர்.
இதன்போது அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக பொலிஸார் அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
52-ஆவது ஆண்டு தினம்
இது குறித்து பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் கூறியதாவது, முனிச் நகரிலுள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே துப்பாக்கியுடன் வந்த 18 வயது இளைஞர் பொலிஸாரை நோக்கி சுட்டார். அதையடுத்து, பொலிஸார் திருப்பிச் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினரும் சுட்டுக் கொல்லப்பட்ட 52-ஆவது ஆண்டு தினத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே, இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் அந்த இளைஞர் துப்பாக்கியுடன் அங்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் ஜோவாசிம் ஹொமன் கூறுகையில், 'இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே ஒருவர் காரை நிறுத்துகிறார்; பிறகு துப்பாக்கியால் சுடுகிறார் என்றால் அது வெறும் தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
