வன்னித் தேர்தல் தொகுதியில் ரணிலின் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்
ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (06.09.2024) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நடவடிக்கைகள்
ஜனாதிபதி தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைக்க வன்னித் தேர்தல் தொகுதியில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதில் ஆராயப்பட்டதுடன், பொறுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் இராஜாங்க அமைச்சர்களான கே.கே.மஸ்தான், சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினரான கு. திலீபன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri