இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள்!பொலிஸார் வெளியிட்ட தகவல்
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 89 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸார் விசாரணை
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "குடு சலிந்து" என்பவரின் தரப்பினரால் "நிலங்க" என்பவரின் தரப்பினரை இலக்கு வைத்து இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
