நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: இன்றும் ஒருவர் பலி
கம்பஹா, படபொத பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்தெரியாத இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கட்டிட பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இதேவேளை, அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய நாட்டில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகமாக பதிவாகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.