பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - சந்தேகநபர் தப்பியோட்டம்
பொரலஸ்கமுவ,மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூடு
கொலை செய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலும் இறந்தவர், 'கோஸ் மல்லி' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் காசாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.