தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
தலவத்துகொட வெலிபாறையில் வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பொலிஸ் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(20) இரவு 9.30 மணியளவில், தலவத்துகொட வெளி வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையொன்றில் பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அறைக்குள் நுழைந்து 9mm துப்பாக்கியால் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், காயமடைந்தவர் வெலி வீதியைச் சேர்ந்த "தினுகா" எனவும், அவர் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |