கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு! (Video)
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அம்பியூலன்ஸ் வாகனம் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பியூலன்ஸ் சாரதிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
