மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
வடக்கு மெக்சிகோவில் மர்மநபர்களால் விருந்து நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 26 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது வடக்கு மெக்சிகோவிலுள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் இடம்பெற்றுள்ளது.
மேலும், பலியானவர்களில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு பேரும், காயம் அடைந்தவர்களில் 5 குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
பொலிஸ் தேடுதல்
இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்போது துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை பொலிஸார் தேடி வருவதோடு, சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
