காலியில் துப்பாக்கிச் சூடு: கணவன் உயிரிழப்பு - மனைவி படுகாயம்
காலி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் காலி - ஹபராதுவ பகுதியில் இன்றைய தினம் (24.05.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 38 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பதியர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |