கொழும்பில் துப்பாக்கிச் சூடு - இளைஞர் பலி
மட்டக்குளி அலிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
26 வயதான ரணவக்க ஆராச்சிலாகே ஹசித சதுரங்க என அழைக்கப்படும் "அலிவத்தே ஹசித" என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் தொடர்பில் திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்தை பகுதியில் நேற்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
