காலி - பலப்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு
பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியில் உள்ள பெட்டிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற நிலையில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்கப்பட்ட நபர் பலபிட்டிய, மஹலதுவ பகுதியைச் சேர்ந்த பெட்டா என்ற நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர்
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனின் கொலையில் முக்கிய சந்தேக நபர் என கூறப்படுகிறது.
தம்மிக்க நிரோஷனிக் வழக்கு தொடர்பில் பலபிட்டிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்று முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri