இலங்கை தமிழர்களுக்காக இந்தியா முன்வர வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் நேற்று(08.09.2025) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் இந்தியாவை மீறி எவரும் ஒரு தீர்வை தமிழர்களுக்கு முன்வைக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் உள்ளனர்.
அரசியல் தீர்வு
பாரதப் பிரதமாரான நரேந்திர மோடி, தமிழ் மக்களது இருப்பை பாதுகாக்கவும், நிரந்தரமான தீர்வை தமிழர்களுக்கு பெற்றுத் தருவதற்கும், இந்த மண்ணில் தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கும், தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒரு அரசியல் தீர்வாக தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அது இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதனால் அந்தத் தேர்தலை நடாத்தவும் உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
