அமெரிக்காவில் திடீரென்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு : 3 பேர் பலி
அமெரிக்காவின் (America) ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதோடு அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணைகள்
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மலாச்சி பீ(வயது 27), டான்ட்ரே புல்லக் (வயது 18), கார்சியா டிக்சன் ஜூனியர் (வயது 26) ஆகியோர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொலிஸார் கூறும்போது, சந்தேக நபர்கள் யாரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணமும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam