அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : இருவர் பலி- 6 பேர் படுகாயம்
அமெரிக்காவின் டென்னிசி(Tennessee) மாநிலம், மெம்பிஸில் (Memphis) நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் பலியானதோடு 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்று(20.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
தொடரும் விசாரணை
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மெம்பிஸ் பொலிஸார் ,இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் ஆறு பேர் காயங்களுடன் அருகில் உள்ள வைத்தியசாலைக்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் அல்லது இதற்கான காரணம் குறித்து பொலிஸார் இதுவரை எந்த தகவலையும் வெளியிடாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
