அமெரிக்க பூங்கா ஒன்றில் துப்பாக்கிச்சூடு : பலர் காயம்
அமெரிக்க, நியூயோர்க்கின் (New York) அப்ஸ்டேட்டில் உள்ள பூங்கா ஒன்றில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேப்பிள்வுட் பூங்காவில், நேற்று (28) மாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள்
சம்பவத்தில் 20 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதோடு ஐந்து பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூடு நடந்த போது அந்த பகுதியில் விருந்து ஒன்று நடந்ததை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இந்தநிலையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
