ஈரான் நீதிமன்ற கட்டடம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு
தென்கிழக்கு ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, இந்த தாக்குதலினால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஹெதான் நகரில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் நேற்று(26) இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பதில் தாக்குதல்
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ளது. இங்கு தீவிரவாதக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையினரிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



