துசித ஹல்லோலுவ மீதான துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் மூவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பெண் உள்ளிட்ட மூவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கைதான மூவரும் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
கடந்த 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி சுற்றுவட்ட வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் துசித ஹல்லோலுவ பயணித்த ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜீப்பை வாகனத்தை வழிமறித்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஹல்லோலுவாவும் அவரது சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவும் வாகனத்தில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
