கிரியெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு - சந்தேகநபரை கண்டுபிடிக்க விசாரணை
இரத்தினபுரி - இங்கிரிய வீதியின் கிரியெல்ல பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, ஒரு தரப்பைச் சேர்ந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகள்
துப்பாக்கிச்சூடு கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஒருவர் காயமடைந்து இரத்தினபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணையில், கிரியெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் ஒரு சந்தேகநபரை கிரியல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடங்கியுள்ளன.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri