கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயம்
கனடா - மொன்றியலை சேர்ந்த 19 வயதுடைய நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மொன்றியல், மவுண்ட் ரோயல் அபெர்டேல் சாலை மற்றும் ட்ரெண்டன் அவென்யூ சந்திப்புக்கு அண்மித்த பகுதியில் அமைந்திருந்த தனியாருக்கு சொந்தமான வீடொன்றில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொன்றியல் பொலிஸாருக்கு இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற அழைப்பையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
அதனை தொடர்ந்து அங்கு விரைந்த மொன்றியல் அவசர சேவை பிரிவு சம்பவ இடத்துக்கு வந்த போது பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞன் தரையில் மயங்கி கிடந்ததை அவதானிக்க முடிந்ததாகவும், இந்த இளைஞனின் உடலின் மேல் பாகத்தில் துப்பாக்கி ரவைகள் தாக்கியிருந்தாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கபடுகின்றது.
இ்ந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவ இடத்தில் உள்ள பல்வேறு சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களை பொலிஸார் சேகரித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தில் இதுவரை 35 கொலை சம்பவங்கள் மொன்றியலில் நடைபெற்றுள்ளதாக பொலிஸாரின் அறிக்கையினை ஆதாரம் காட்டி செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam