இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று(21.04.2026) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், குறித்த சந்தேக நபர் தொடர்பாக பல வங்கிக் கணக்குகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை விசாரிக்க அனுமதி கோரியுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில், பதினைந்தாவது சந்தேக நபர் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவர் ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அப்போதைய நீதிபதி, சந்தேக நபர் மற்றும் அவரது வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி, அது குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan