டெல்டா வைரஸ் தொற்று தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
திரிபடைந்த டெல்டா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்டா மாறுபாடினால் பாதிக்கப்பட்டவர், மற்றுமொருவருக்கு பரப்ப கூடிய நிலைமை ஏற்பட்டு 2 நாட்களாகும் வரை நோய் அறிகுறிகள் தென்படாதென சர்வதேச இதழான நேச்சர் தெரிவித்துள்ளது.
ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் பெஞ்சமின் கவுலிங் மேற்கொண்ட ஆய்வுக்கமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே வைரஸ் தெளிவாக பரவத் தொடங்குகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கமைய, இந்த மாறுபாட்டினை தடுக்க மிகவும் கடினமானது என பெஞ்சமின் கவுலிங் தெரிவித்துள்ளார்.
சாதாரண கொவிட் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் நோய் அறிகுறிகள் ஏற்பட 6 நாட்களாகின்றது. ஐந்தாவது நாளின் இடைப்பட்ட காலப்பகுதியில் வைரஸ் தொற்று மற்றுமொருவருக்கு பரவும். ஆனால் டெல்டா வகைகளில், வைரஸ் பரவுவதற்கும் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஒரு தீவிர நிலை என்பதை ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.
இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 74 வீதமானோர் டெல்மா தொற்றுக்குள்ளாகியும் நோய் அறிகுறிகளற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
