இஸ்ரேலின் பின்னடைவு..மொசாட் உளவாளி கூறும் அதிர்ச்சித் தகவல்!
இஸ்ரேல் தன்னுடைய எதிரி யார்? அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தற்போது வரை சரியாக புரிந்துக்கொள்ளவில்லையென்று முன்னாள் மொசாட் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் இவ்வாறானதொரு தாக்குதலை முன்னெடுக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை, இஸ்ரேல் தன்னுடைய தொழில்நுட்பத்தை தான் நம்பிக்கொண்டுள்ளது, அதனால்தான் இவ்வாறானதொரு பேரிழப்பை சந்தித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஹமாஸ் இஸ்ரேலுடனான போர் 100 வருடங்களின் பின்னர் எவ்வாறு இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில் அதனை அணுகிவருகின்றது.
ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் பற்றிய தவறான கற்பிதங்களுடன் அவர்களை அணுகிவருகின்றது.
2024 ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் அடைந்த தோல்வி புலனாய்வு தோல்வி மட்டுமல்ல, இராணுவ தோல்வியும் தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..