ராஜபக்சர்களின் மாளிகையில் பணிப்பெண்களாக்கப்பட்ட சிறுமிகள்..! 2009-ல் கடத்தப்பட்ட மகள் தொடர்பில் பகீர் தகவல்
2009ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுமிகள், நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் அருகில் இருந்தார்கள் என்றும், இது தொடர்பில் கேட்டபோது அவர் வெடவெடத்துப் போனார் என்றும் மகளை இழந்த வவுனியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னுடைய மகள் கடத்தப்பட்ட பின்னர், மைத்திரிபால சிறிசேனவுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவரைப் பார்த்தேன். இந்த விடயம் தொடர்பில் நான்காம் மாடியில் விசாரணைகள் நடத்தப்பட்டன. அப்போது நான் பார்த்த விடயத்தைக் கூறியபோது, அவர் வெடவெடத்துப் போனதை நான் அவதானித்தேன்.
16 வயதான எனது மகள் விடுதலைப் புலிகளுடன் இணைந்துவிட்டதாகத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன் கூறியபோது, அவருக்கும் எங்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிலிருந்து நாங்கள் எங்களுடைய குழந்தைகளுக்காகப் போராடி வருகின்றோம்.
சுமந்திரனும் அதே போன்றவர்தான், அவரால் எங்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்பதால், அவரை நாங்கள் கண்டுகொள்வதில்லை என்றார்.
இதேவேளை, மகளை இழந்த தாயார் கடந்த 10 வருடங்களாக அனுபவித்து வரும் இன்னல்கள் தொடர்பில் கண்ணீருடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை கீழுள்ள காணொளியில் தெளிவாகப் பார்க்கலாம்.
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam
போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் News Lankasri