இலங்கையில் வீழ்ந்த சீன விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் வீழ்ந்த சீன விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 என்ற சீன பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.
ரேடார் தொடர்புகளை இழந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான படை தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க விமானத்தில் எந்த தவறும் இல்லை பயிற்சி பெற்ற விமானிகளின் தவறு என்று கூறியமை மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியமையானது இந்திய- சீன போட்டியின் வெளிபாடாகதான் உள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
