இலங்கை மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்(Video)
இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக உளநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் குறைந்தளவில் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 30 வீதத்தால் அதிகரித்துள்ளதென கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் உளநல விஷேட வைத்தியர், ரூமி ரூபென் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“இலங்கையில் உளநலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் பொருளாதாரப் பிரச்சினைகளால் மருந்துகளை உட்கொள்வதையும் நிறுத்தியுள்ளனர்.
விரக்தியை வெளிப்படுத்தும் இளைஞர்-யுவதிகள்
இலங்கையில் இருப்பதால் தமக்கு எதிர்காலம் இருக்காது என்ற விரக்தியும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத அழுத்தங்களாலும் இளைஞர், யுவதிகள் மத்தியிலும் உளவியல் நோய் அதிகரித்துள்ளது.
இவ்வாறான காரணங்களால் ஏற்பட்டுள்ள மன அழுத்தங்களை அவர்கள் சமூகத்தின் மீது காட்டி வருவதுடன் தமது கோபத்தை வெளிப்படுத்த சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
இதேவேளை, முதியோர் மாத்திரமின்றி சிறுவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உரிய காலத்தில் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத அழுத்தத்தில் அவர்கள் இருக்கின்றனர்.”என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




