லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பரவியுள்ள ஒமிக்ரோன் தொற்று! - வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் கோவிட் வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குறைந்தது இரண்டு அளவு தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் கிழக்கு மிட்லாண்ட்ஸ், இங்கிலாந்து கிழக்கு, லண்டன், தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ஒமிக்ரோன் வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப விளக்கக்காட்சியில், நவம்பர் 30 வரை அறியப்பட்ட 22 வழக்குகளில் 12 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு குறைந்தது நான்கு வாரங்களுக்கு முன்பே முதல் அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஆறு பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை எனவும் இரண்டு வழக்குகளின் தரவு கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒமிக்ரோனுக்கு எதிராக தடுப்பூசி எவ்வளவு சிறப்பாக செயற்படுகின்றது என்ற தரவு வெளியாகவில்லை. டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனெனில் 12 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 80 வீதத்திற்கு அதிகமானோர் இப்போது இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர்.
தென்னாபிரிக்காவில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் திரிபு தற்போது உகலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள நிலையில், சில நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்று தடுப்பூசிகளுக்கு கட்டுப்பாடாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரித்தானியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அபாய மதிப்பீட்டையும் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Amber status - Transmissibility Between Humans. "At least as transmissible as currently circulating variants. Omicron is transmitting rapidly and successfully. Increased transmissibility compared to Delta is biologically plausible."
Red status - Naturally Acquired Immunity. "Mutations suggestive of reduced protection from natural immunity. Based on experience with other variants, laboratory data on individual mutations, and structural modelling, the mutations present are very likely to reduce antibody binding."
Red status - Vaccine-Derived Immunity. "Mutations suggestive of reduced protection from vaccine derived immunity. The mutations present are likely to reduce antibody binding."
Red status - Therapeutics. "Mutations suggestive of reduced effectiveness of a treatment in UK clinical use. The mutations present are likely to reduce the binding of most available therapeutic monoclonal antibodies, based on structural modelling."