லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் ஸ்பைடர் மேன் உடையணிந்து பலர் மீது தாக்குதல்!
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், ஸ்பைடர் மேன் உடையணிந்த நபர், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சிலரை தாக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை லண்டனில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில், இரவு நேரத்தில் ஸ்பைடர் மேன் உடையணிந்து வந்த நபர் திடீரென்று அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் மக்களை தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து, 31 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி 37 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களைத் தொடர்ந்து 17 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதில், 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது காயமடைந்த 5 பேர் சம்பவ இடத்திலே சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சூப்பர் மார்க்கெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் கடையில் வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வன்முறை சம்பவம் நடந்ததைக் கண்டு சாதாரணமாக விடமாட்டோம்.
பொலிஸ் விசாரணையில் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக யாரேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.